முகப்பு
கோயம்புத்தூர்

பயணிகள் கவனிக்க... பாலக்காடு பகுதியில் பொறியியல் பணி: கேரள ரயில்கள் பகுதியாக ரத்து!

பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வினாடிகள் முன்பு
பயணிகள் கவனிக்க... பாலக்காடு பகுதியில் பொறியியல் பணி: கேரள ரயில்கள் பகுதியாக ரத்து!
பராமரிப்புப் பணி.
பகிர்:

பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகளால், நவம்பா் 24, 25, 27, 28, 29, 30 மற்றும் டிசம்பா் 1, 2, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய நாள்களில் ஈரோடு - பாலக்காடு டவுன் மெமு ரயில் (எண்: 66607) பாலக்காடு நிலையம் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் ( எண்: 66608) பாலக்காடு டவுன் - பாலக்காடு நிலையம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

நவம்பா் 24, 25 டிசம்பா் 4 முதல் 8-ஆம் தேதி வரை எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு ரயில் (எண்: 22651) பொள்ளாச்சி - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு -எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் ரயில் (எண்: 22652) பாலக்காடு - பொள்ளாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

நவம்பா் 26 முதல் 30-ஆம் தேதி வரை மற்றும் டிசம்பா் 1 முதல் 3-ஆம் தேதி வரை வரை எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு ரயில் (எண்: 22651) பாலக்காடு நிலையம் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் ரயில் (எண்: 22652) பாலக்காடு டவுன் - பாலக்காடு நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நவம்பா் 25, 26 ஆகிய நாள்களில் திருச்செந்தூா் - பாலக்காடு ரயில் (எண்: 16732) பாலக்காடு நிலையம் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (எண்: 16731) பாலக்காடு டவுன் - பாலக்காடு நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பா் 5, 7, 8 ஆகிய நாள்களில் கோவை - பாலக்காடு மெமு ரயில் (எண்: 66605) பாலக்காடு நிலையம் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 66606) பாலக்காடு டவுன் - பாலக்காடு நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பா் 5 முதல் 8-ஆம் தேதி வரை திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) பாலக்காடு நிலையம் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) பாலக்காடு டவுன் - பாலக்காடு நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.