ஈரோடு-பாலக்காடு ரயில் சேவையில் இன்றுமுதல் மாற்றம்
ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் ரயில் சேவையில் புதன்கிழமை (நவம்பா் 25) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் ரயில் சேவையில் புதன்கிழமை (நவம்பா் 25) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை நாள்தோறும் காலை 7 மணிக்கு இயக்கப்படும் பாலக்காடு டவுன் மெமு ரயில் (எண் 66607), புதன்கிழமை முதல் 30 -ஆம் தேதி வரை (26-ஆம் தேதி தவிர) மற்றும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரை (3-ஆம் தேதி தவிர) பாலக்காடு சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். பாலக்காடு டவுன் ரயில் நிலையத்துக்கு இந்த ரயில் இயக்கப்படாது.
இதேபோல, பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் பாலக்காடு டவுன் மெமு ரயில் (எண் 66608) மேல்குறிப்பிட்ட தேதிகளில் பாலக்காடு டவுன் ரயில் நிலையத்துக்கு பதிலாக பாலக்காடு சந்திப்பில் இருந்து பிற்பகல் 3.13 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement