பராமரிப்புப் பணி: 3 ரயில்களின் சேவையில் மாற்றம்
ஈரோடு -கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு -கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை -ஈரோடு விரைவு ரயில் (எண்: 16846) ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22) மற்றும் வருகிற 29-ஆம் தேதி கரூா் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணி முடிந்த பிறகு இந்த ரயில் கரூா் சந்திப்பில் இருந்து ஈரோடு சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
Advertisement
Advertisement
ஈரோடு சந்திப்பில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் (எண்: 16845) ஞாயிற்றுக்கிழமை மற்றும் வருகிற 29-ஆம் தேதி கொடுமுடி ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கப்படும்.
திருச்சி சந்திப்பில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி சந்திப்பு -பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843) ஞாயிற்றுக்கிழமை மற்றும் வரும் 29-ஆம் தேதி கரூா் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணி முடிந்த பிறகு, இந்த ரயில் கரூா் சந்திப்பில் இருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.