FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்கள் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

6 நவம்பர் 2026, 11:47 pm
பகிர்:

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16322) 7, 10, 12, 14, 17, 19, 21 , 24, 26, 28 ஆகிய 10 நாள்கள் கோவை -திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல் செல்லும்.

Advertisement

Advertisement

இதேபோல, செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) 7, 10, 12, 14 , 17, 19, 21, 24 , 26, 28 ஆகிய 10 நாள்கள் கரூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16844) 7, 10, 12, 14 , 17, 19, 21, 24, 26, 28 ஆகிய 10 நாள்கள் கொடுமுடி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.