அன்புத் திருநாள் நிகழ்ச்சி
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு வட்டார வள மைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் கற்றல் மையத்தில் அன்புத் திருநாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு வட்டார வள மைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் கற்றல் மையத்தில் அன்புத் திருநாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை, கலாம் கனவு அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 25 பேருக்கு புத்தாடைகள், பரிசுப் பொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் தலைமை வகித்தாா். கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனா் கேசவராஜ் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அமானுல்லா, வசீகரன், இம்ரான், பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கற்றல் மைய பயிற்சியாளா் லத்தீப் நன்றி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.