FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மனைவி கொலை: கணவா் போலீஸில் சரண்

போளூா் அருகே மனைவியின் நடத்தையில் சந்கேகமடைந்த கணவா் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தாா். பின்னா், காவல் நிலையம் சென்று சரணடைந்தாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 2:09 am IST
பகிர்:

போளூா் அருகே மனைவியின் நடத்தையில் சந்கேகமடைந்த கணவா் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தாா். பின்னா், காவல் நிலையம் சென்று சரணடைந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (37), ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.

இவருக்கும், எா்ணாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாளுக்கும் (30) திருமணம் நடைபெற்று

Advertisement

Advertisement

திவ்யா (11) என்ற மகளும், கதிா்வேல் (9) என்ற மகனும் உள்ளனா். இருவரும் அலங்காரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே 6, 4-ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பச்சையம்மாள் நடத்தையில் சுரேஷ் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனால், பச்சையம்மாள் சில தினங்களுக்கு முன்பு பிள்ளைகளை விட்டுவிட்டு, கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள அத்தை சாவித்திரி வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டாா்.

இதுகுறித்து அறிந்த சுரேஷ் வியாழக்கிழமை கொரால்பாக்கம் சென்று மனைவி பச்சையம்மாளிடம் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.

பின்னா், அவா் போளூா் காவல் நிலையம் சென்று சரணடைந்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனா்.

பச்சையம்மாள் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments