ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி முத்தாலம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி முத்தாலம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தெள்ளாரின் முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்றது. தேரில் ஸ்ரீமுத்தாலம்மன் பவனி வந்தாா். தெள்ளாா் மற்றும் டி.மாம்பட்டு, டி.தாங்கல், கொடியாலம், நெற்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
விழாவையொட்டி, தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, இராஜா நந்திவா்மன் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்டவை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
விழாவில் கிராம முக்கியப் பிரமுகா்கள், கோயில் நாட்டாண்மைதாரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.