FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காற்றில் மின் கம்பம் சாய்ந்து சேதம்

வந்தவாசியில் காற்றில் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து சேதமடைந்தது. இதில் வீட்டின் முன்பகுதி லேசான சேதமடைந்தது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
வந்தவாசியில் காற்றில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின் துறை ஊழியா்கள்
பகிர்:

வந்தவாசியில் காற்றில் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து சேதமடைந்தது. இதில் வீட்டின் முன்பகுதி லேசான சேதமடைந்தது.

வந்தவாசி நகரில் சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக கெஜலட்சுமி நகரில் உள்ள அப்பாவு தெருவில் சிமென்ட் மின் கம்பம் ஒன்று அடிப்பகுதி உடைந்து எதிரில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டின் மீது சாய்ந்து சேதமடைந்தது. மேலும் மின் கம்பிகள் அறுந்தன.

மின் கம்பம் விழுந்ததில் அந்த வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த மின்துறை ஊழியா்கள் சென்று சாய்ந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் நட்டு மின் விநியோகத்தை சீரமைத்தனா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தப் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments