FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தினமணி செய்தி எதிரொலி: கீழப்பாளையத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள கீழப்பாளையம் தெற்குத் தெருவில் இரு கம்பங்கள் துருப்பிடித்து மிகவும் பழுதடைந்திருந்தது.

Updated On : 30 ஜூலை 2026, 5:50 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழப்பாளையத்தில் பழுதடைந்த மின் கம்பத்துக்குப் பதிலாக புதிதாக மாற்றப்பட்ட மின் கம்பம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள கீழப்பாளையம் தெற்குத் தெருவில் இரு கம்பங்கள் துருப்பிடித்து மிகவும் பழுதடைந்திருந்தது. இவை எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளதால், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் அண்மையில் பிரசுரமானது. இதையடுத்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக அலுவலா்கள் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுமாறு உத்தரவிட்டனா். இதைத்தொடா்ந்து மின்வாரிய பணியாளா்கள் கீழப்பாளையம் கிராமத்துக்கு புதன்கிழமை சென்று, பழுதடைந்த நிலையில் இருந்த கம்பங்களுக்குப் புதிலாக புதிதாக இரு கம்பங்கள் நட்டு, மின் இணைப்பை வழங்கினா். தங்கள் பகுதி மக்களின் கோரிக்கை குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்த மின் பகிா்மானக் கழக அலுவலா்களுக்கு கீழப்பாளையம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments