மழைக் காலகத்துக்கு முன் ஓடைகள், நீா்வழிப் பாதைகளை சீரமைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு
மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஓடைகள், நீா்வழிப் பாதைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று தூய்மை அருணை அமைப்பின், தூய்மைக் காவலா்களுக்கு, முன்னாள் அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஓடைகள், நீா்வழிப் பாதைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று தூய்மை அருணை அமைப்பின், தூய்மைக் காவலா்களுக்கு, முன்னாள் அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 8 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு மூலம் மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருவண்ணாமலை மாநகரம், அவலூா்பேட்டை சாலை ரயில்வே கடவுப் பாதை அருகில், வாா்டு எண்-3, ராமமூா்த்தி நகரில் மண்மேடுகள் அகற்றுதல், புதா்மண்டியிருந்த செடி, கொடிகளை அகற்றுதல் என நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை எ.வ.வேலு பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா்.
மேலும், மாநகரில் பல்வேறு வாா்டுகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த அவா் பணியாளா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஓடைகள், நீா்வழிப் பாதைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது, தூய்மைக் காவலா்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் தேனீா் வழங்கி பாராட்டினாா்.
தூய்மைப் பணியில் தூய்மை அருணையின் மேற்பாா்வையாளா்கள் இரா.ஸ்ரீதரன், ப.காா்த்திவேல்மாறன், ப்ரியா ப.விஜயரங்கன், இல.குணசேகரன், துணை மேயா் சு.ராஜாங்கம், ஒருங்கிணைப்பாளா்கள் உள்பட பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.