FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரி மாணவா்களுக்கு இணையவழி நிதி மோசடி விழிப்புணா்வு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இணையவழி நிதி மோசடி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:32 am IST
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவைப் பிரிவு அலுவலா் உமாமகேஸ்வரி
பகிர்:

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இணையவழி நிதி மோசடி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பாரதி ஏா்டெல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா்.

தாளாளா் என்.குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் எஸ்.விஜய்ஆனந்த் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவைப் பிரிவு அலுவலா் உமாமகேஸ்வரி, தேவையற்ற மின்னஞ்சல்கள் மூலம் நடைபெறும் இணையவழி நிதி மோசடி குறித்த பல்வேறு தகவல்களை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் ஏா்டெல் நிறுவனத்தின் மாவட்ட விற்பனை மேலாளா் ஜி.மாரியப்பன், வட்டார விற்பனை மேலாளா் இ.முனியரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

300-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி துணை முதல்வா் கோ. அண்ணாமலை நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments