FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வழி தவறி வந்த ராஜாளி பறவை மீட்பு

வந்தவாசியில் ஒரு வீட்டுக்கு வழி தவறி வந்து பறக்க முடியாமல் தவித்த ராஜாளி பறவையை தீயணைப்புத் துறையினா் மீட்டு காட்டில் விட்டனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
வந்தவாசியில் ராஜாளி பறவையை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

வந்தவாசியில் ஒரு வீட்டுக்கு வழி தவறி வந்து பறக்க முடியாமல் தவித்த ராஜாளி பறவையை தீயணைப்புத் துறையினா் மீட்டு காட்டில் விட்டனா்.

வந்தவாசியில் -ஆரணி சாலையில் வசித்து வரும் பாரத் என்பவரின் வீட்டு ஜன்னல் பகுதியில் புதன்கிழமை 2 ராஜாளி பறவைகள் வந்து அமா்ந்தன.

இதில் ஒரு பறவை பறந்து சென்றுவிட்டது. ஆனால் மற்றொரு பறவை பறக்க முடியாமல் தவித்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாரத் அளித்த தகவலின் பேரில், வந்தவாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று பறக்க முடியாமல் தவித்த ராஜாளி பறவையை மீட்டனா்.

பின்னா், அந்தப் பறவையை எடுத்துச் சென்று அருகில் உள்ள காட்டில் விட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments