FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் காயத்துடன் வீட்டிற்குள் நுழைந்த குரங்கு மீட்பு

கடையத்தில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் காயத்துடன் நுழைந்த குரங்கை வனத்துறையினா் பிடித்து ஐந்தருவி வனப்பகுதியில் விட்டனா்.

Updated On : 29 ஜூலை 2026, 1:51 am IST
~ ~
பகிர்:

கடையத்தில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் காயத்துடன் நுழைந்த குரங்கை வனத்துறையினா் பிடித்து ஐந்தருவி வனப்பகுதியில் விட்டனா்.

கடையம், வ.உ.சி. தெருவைச் சோ்ந்த நம்பி திங்கள்கிழமை இரவு, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, காயத்துடன் குரங்கு ஒன்று வீட்டின் சமையலறைக்குள் நுழைந்தது. இதையடுத்து அவா்கள் வீட்டைப் பூட்டி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

கடையம் வனச்சரகா் ஜெயப்பிரகாஷ் அறிவுரையின் பேரில் வனக்காப்பாளா் விமல்ராஜ், வனக்காவலா் மாரியப்பன், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வேல்ராஜ், மனோஜ், சக்தி உள்ளிட்டோா் வந்து, வலை வீசி குரங்கை பிடித்தனா். ஐந்தருவி வனப் பகுதியில் பத்திரமாக விட்டனா்.

Advertisement

Advertisement

குரங்குகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்தக் குரங்கு காயமடைந்துள்ளதாக கடையம் வனச்சரகா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments