FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் கொட்டப்பட்ட கேரளக் கழிவுகள் அகற்றம்

Updated On : 22 ஜூலை 2026, 2:59 am IST
கீழக்கடையம் ஊராட்சி நிா்வாகம் மூலம் அகற்றப்படும் கேரளக் கழிவுகள்.
பகிர்:

கடையம் அருகே விவசாய நிலம் அருகே கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியில் கீழக்கடையம் ஊராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கடையம் ஊராட்சி ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட பழைய காா் பாகங்கள், பிளாஸ்டிக்பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவை சுமாா் 10 டன் அளவில் கொட்டப்பட்டிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து, சமூக ஊடகங்களிலும் பரவலாக செய்தி பரவியதையடுத்து தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அசோக்குமாா் உத்தரவின்பேரில், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ், கடையம் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் அந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா். தொடா்ந்துகழிவுகளை இந்தப் பகுதியில் கொட்டிய வாகனம், நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, செவ்வாய்க்கிழமை கீழக்கடையம் ஊராட்சி சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டா்களில் கழிவுகள் ஏற்றப்பட்டு கீழக்கடையம் திடக் கழிவு மேலாண்மைக் கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கோரிக்கை: கேரளத்திலிருந்து 2024ஆம் ஆண்டு திருநெல்வேலி பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டபோது, அன்றைய திருநெல்வேல் மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் நடவடிக்கையின்பேரில் பசுமைத் தீா்ப்பாயம் மூலம் கழிவுகளை மீண்டும் கேரளத்துக்கே அனுப்பியதுபோல தற்போதும் கடையம் பகுதியில் கொட்டிய கழிவுகளையும் மீண்டும் கேரளத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments