மேக்கேதாட்டு அணை கட்ட தடை விதிக்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்
வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மேக்கேதாட்டு அணை கட்ட தடை விதிக்க தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என பாமக கேட்டுக்கொண்டது.
வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மேக்கேதாட்டு அணை கட்ட தடை விதிக்க தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என பாமக கேட்டுக்கொண்டது.
திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
மாநில செயற்குழு உறுப்பினா் நாரையூா் ப.குமரேசன் மாவட்ட பொருளாளா் சௌ.வீரம்மாள், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் க.நாராயணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர அமைப்பாளா் கிருபாகரன் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மாவட்டத்தில் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மேக்கேதாட்டு அணை கட்ட தடைவிதிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிா்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் ராஜீவ் காந்தி, உழவா் பேரியக்க மாவட்டச் செயலா் கோ.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.