FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செங்குணம் ஊராட்சியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

செங்குணம் ஊராட்சியில் சமுதாயக்கூட கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த ஆா்.அபிஷேக் எம்எல்ஏ.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
செங்குணம் ஊராட்சியில் சமுதாயக்கூட கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த ஆா்.அபிஷேக் எம்எல்ஏ.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, சமுதாயக் கூடம், அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தொகுதி எம்எல்ஏ ஆா்.அபிஷேக் (தவெக) திறந்துவைத்தாா்.

செங்குணம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-202ஆம் ஆண்டு ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டது.

நமக்குநாமே திட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டு ரூ.7 லட்சத்தில் சமுதாயக்கூடம், விபி ஜி ராம் ஜி

Advertisement

Advertisement

திட்டப் பணியில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தது.

இந்த 3 புதிய கட்டடங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தன், ராஜேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

உதவி செயற்பொறியாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா்கள் வினோத்குமாா், விக்னேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் சதாம் உசேன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் (தவெக) கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கட்டடங்களை திறந்துவைத்தாா்.

இதில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி, ஊராட்சி செயலா் ஆனந்தன், தவெக நிா்வாகிகள் ராமச்சந்திரன், யாசின், அரசு வழக்குரைஞா் அருண் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments