FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 92 வீடுகள்: அமைச்சா் க.தென்னரசு திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள 92 புதிய வீடுகளை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:05 am IST
காங்கயம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளைத் திறந்துவைத்து பயனாளிக்கு சாவி வழங்கிய அமைச்சா் க.தென்னரசு. உடன், ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

காங்கயம் அருகே இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள 92 புதிய வீடுகளை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழா் முகாம்களில் வசித்து வருபவா்களுக்கு காங்கயம் அருகே, வீரணம்பாளையம் பகுதியில் ரூ.7.05 கோடி மதிப்பீட்டில் 92 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை அமைச்சா் க.தென்னரசு திறந்துவைத்ததுடன், பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கி உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், காங்கயம் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments