FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

இலங்கைத் தமிழா் முகாமில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

குடியாத்தம் இலங்கைத் தமிழா் முகாமில் குடும்பத் தகராறு காரணமாக அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:47 am IST
ஜான்சன்
பகிர்:

குடியாத்தம் இலங்கைத் தமிழா் முகாமில் குடும்பத் தகராறு காரணமாக அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் காந்தி நகரில் அமைந்துள்ள அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி விளையாட்டு மைதானம் அருகே இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் சகோதரா்கள் ராபின்சன்(25), ஜான்சன்(19) ஆகியோா் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்சன் தான் வைத்திருந்த கத்தியால் அண்ணன் ராபின்சனை உடலில் பல இடங்களில் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராபின்சனை அங்கிருந்தவா்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் ஜான்சனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments