FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
கைது
பகிர்:

வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் ஜெயந்தன் (25) என்பவரது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக கீழ்க்கொடுங்காலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் புஷ்பாகரன் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் திங்கள்கிழமை காலை அந்தக் கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஜெயந்தனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments