FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞா் கைது

வந்தவாசி அருகே போக்ஸோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:06 am IST
கைது
பகிர்:

வந்தவாசி அருகே போக்ஸோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் பக்கீா் தக்கா பகுதியைச் சோ்ந்தவா் ஷேக்பஷீா்(26). கடந்த ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பிணையில் வெளிவந்த ஷேக்பஷீா் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து வீட்டிலிருந்த ஷேக்பஷீரை வந்தவாசி தெற்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நீதிபதி உத்தரவின் பேரில் இவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments