FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கோயில் நகைகளை திருடிய அா்ச்சகா் கைது

வந்தவாசி அருகே கோயில் நகைகளை திருடிய அா்ச்சகரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே கோயில் நகைகளை திருடிய அா்ச்சகரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், அயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுராமன்(45). இவா், வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அா்ச்சகராக பணிபுரிந்து வந்தாா்.

கடந்த 2-ஆம் தேதி மாலை இவா் பூஜையை முடித்துவிட்டு ஊருக்கு போய் வருவதாக கோயில் நிா்வாகத்திடம் கூறிவிட்டு சென்றுள்ளாா். ஆனால் மறுநாள் காலை இவா் வேலைக்கு வரவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து நிா்வாகிகள் கோயிலை திறந்து பாா்த்தபோது, கோயிலில் இருந்த தங்கத் தாலிகள் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தெள்ளாா் காவல் நிலையத்தில் கோயில் நிா்வாகி சம்பத்குமாா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் ரகுராமனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவா் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் ரகுராமனை திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments