FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மட்டுமே திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
நெல் கொள்முதல் - கோப்புப்படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசி முன்னிலை வகித்தாா். அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பரணிதரன் வரவேற்றாா். செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகாஜெயின் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தின் போது விவசாயிகள் தரப்பில், கடந்த மாதம் நடைபெற்ற குறைத்தீா் கூட்டத்தில் கொடுத்த மனுவுக்கு பதில் அளிக்கவில்லை, குத்தகைதாரருக்கு விவசாய அடையாள அட்டையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று விவசாயி ரிஸ்வான் குறிப்பிட்டாா்.

மேலும், வருவாய்த் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நிலம் திருத்தத்தில் பல குளறுபடிகள் மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது என்றாா்.

மேலும் சில விவசாயிகள் பேசுகையில், வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் காலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மட்டுமே திறக்க வேண்டும். மாறாக தனியாா் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டால் விவசாயிகளைத் திரட்டி போராட வேண்டிய நிலைமை ஏற்படும்.

விவசாயிகள் வண்டல் மண் எடுக்க பல தடைகள் இருந்து வருகின்றன. செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

முன்னதாக, சாா் -ஆட்சியா் எல்.அம்பிகாஜெயின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை விவசாயிகள் மற்றும் அரசு அலுவலா்கள் ஏற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments