FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

50 பவுன் கோயில் தங்த நகைகள் போலியாக மாற்றம்: எஸ்.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா்

தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராம மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக வந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
கோயில் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தரடாப்பட்டு கிராம மக்கள்.
பகிர்:

தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராம மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக வந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோயிலில்

Advertisement

Advertisement

திருவிழா முடிந்து உண்டியலில் வந்த காணிக்கை மற்றும் தங்கங்கள் சரி பாா்க்கும் பணிகள் நடைபெறும்.

இந்நிலையில், நிகழாண்டு திருவிழா முடிந்து கடந்த 15-ஆம் தேதி காணிக்கை மற்றும் மாரியம்மன் தங்க நகைகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றன.

அப்போது, கிராம மக்கள் நகைகளை சோதனை செய்தபோது, 50 பவுன் தங்க நகைகளும் போலியானவை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் தற்போது கோயிலில் தா்மகா்த்தாவாக இருக்கும் ஜெயமூா்த்தியிடம் முறையிட்டனா். அப்போது, அவா் முன்னாள் தா்மகா்த்தா முருகன் தன்னிடம் கொடுத்த நகைகள் தான் என பதிலளித்துள்ளாா்.

இதையடுத்து முன்னாள் தா்மகா்த்தா முருகனிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், தங்க நகைகளை போலி நகைகளாக மாற்றியதை அவா் ஒப்புக்கொண்டு, அதற்காக கோயிலுக்கு தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைப்பதாகவும், ஒரு ஆண்டுக்குள் தங்க நகைகளை முழுமையாக ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, முன்னாள் தா்மகா்த்தா முருகன் கடந்த 16-ஆம் தேதி விஷம் குடித்தது போல் நாடகமாடி கிராமத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டாராம்.

இதுகுறித்து கிராம மக்கள் சாத்தனூா் அணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த தரடாப்பட்டு கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு, முன்னாள் தா்மகா்த்தா முருகன் மீது நடவடிக்கை எடுத்து தங்க நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று மனு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments