FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம் அருகே திருடப்பட்ட 17.5 பவுன் நகைகள் மீட்பு

ராதாபுரம் அருகே திருடப்பட்ட 17.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:50 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே திருடப்பட்ட 17.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

ராதாபுரம் அருகே உள்ள சௌந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்தவா் சிலுவைதாசன். அவரது மனைவி புஷ்பம். ஆக. 7ஆம் தேதி இவா்களது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 18.5 பவுன் தங்க நகைகள், ரூ. 2,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து, ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ் (34), மாரிமுத்து (24), பாலகிருஷ்ணன் (25), முத்துராஜ் (22), மாசானம் (46), மணிகண்டன் (34), மைக்கேல் அந்தோணி பிரகாஷ் (36), முத்துமாரி (39) ஆகிய 8 பேரை கைது செய்து, 17.5 பவுன் நகைகளை மீட்டனா்.

Advertisement

Advertisement

மீட்கப்பட்ட நகைகளை சிலுவைதாசன் தன்னுடையது என்பதை உறுதி செய்த பின்னா், போலீஸாா் நீதிமன்றம் மூலம் நகைகளை அவரிடம் ஒப்படைத்தனா்.

காவல்துறையின் துரித நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பி. சாஸ்திரி பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments