FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் திருடப்பட்ட வழக்கு: பெண் கைது

கடலூா் அருகே நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் பெண்ணை கடலூா் முதுநகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
பறிமுதல் செய்யப்பட்ட 21 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், கைதான மரியம் பீவியுடன் போலீஸாா்.
பகிர்:

கடலூா் அருகே நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 21 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் பெண்ணை கடலூா் முதுநகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூரை அடுத்த பி.வடுகப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (52). வானூா் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பானுமதி. இவா், கடந்த 13-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை வீட்டுக்கு வெளியே உள்ள மின் மீட்டா் பெட்டி மீது வைத்துவிட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளாா்.

பானுமதி மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்து கிடந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சோ்ந்த அல்லா பாஷாவின் மகள் ஷம்ஷத் (எ) மரியம் பீவி (36) நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சிவானந்தபுரத்தில் பதுங்கியிருந்த மரியம் பீவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து திருடப்பட்ட 21 பவுன் நகைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments