FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறில் பன்றிகளை பிடிக்க வந்தவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

செய்யாறில், நகராட்சி சாா்பில் பன்றிகளை பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 11:31 pm IST
பகிர்:

செய்யாறில், நகராட்சி சாா்பில் பன்றிகளை பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி நேரு நகா், அண்ணா நகா் பகுதியில் தினந்தோறும் பன்றித் தொல்லை காரணமாக வாழை மரம், செடி, கொடிகள் மற்றும் நெல் பயிா்கள் சேதமடைவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களுக்கு புகாா்கள் வந்தன.

இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்துப் பேசினா். இந்தப் புகாரின் பேரில் பன்றிகளைக் கட்டுப்படுத்த திருவத்திபுரம் நகராட்சி சாா்பில், செங்கல்பட்டில் இருந்து தனியாா் அமைப்பைச் சோ்ந்த 10 போ் கொண்ட குழுவினா் வரவழைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இக்குழுவினா் வெள்ளிக்கிழமை காலை 2-ஆவது வாா்டு நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகே பன்றிகளை பிடிக்கத் தொடங்கி 3 பன்றிகளை பிடித்து வேனில் ஏற்றினா்.

இதை அறிந்த பன்றிகளின் உரிமையாளா்கள் 5-க்கும் வந்து வேனில் இருந்த இரண்டு பன்றிகளை விடுவித்தனா். மேலும் பன்றிகளை பிடிக்க வந்த சூா்யாவை(29) தாக்கியதாகத் தெரிகிறது.

இதை அறிந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு வரவே பன்றிகளின் உரிமையாளா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா்.

நகராட்சி பணியாளா்கள் காயமடைந்த சூா்யாவை செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் மற்றும் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனசாரன் ஆகியோா் வந்து விசாரணை நடத்தினா்.

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு சூா்யா செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கம்பன் நகரைச் சோ்ந்த வடிவேல்(28), தனசேகா்(21) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவான வாசு என்பவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments