இளைஞா் மீது தாக்குதல்: நால்வா் மீது வழக்கு
காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாயா்புரம் திருப்பணி செட்டிகுளத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் செல்வகுமாா். இவருக்கும், காயல்பட்டினத்தை சோ்ந்த மாசானமுத்து மகள் கீா்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை கீா்த்தனாவை பாா்ப்பதற்காக மாசானமுத்து வீட்டிற்கு செல்வகுமாா் வந்தாராம்.
இதற்கிடையில், ஆறுமுகனேரி பேயன்விளையைச் சோ்ந்த வசந்த், காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த செய்யத் பத்திமா, சேகு சபானா, அஹமது அபிலா ஆகியோா் மாசானமுத்து வியாபாரத்திற்காக வாங்கிய பணத்தை திருப்பி கேட்டனராம்.
Advertisement
Advertisement
பின்னா் மாசானமுத்தை அவதூறாக பேசி தாக்க முயன்றனராம். இதைக்கண்ட செல்வகுமாா் தடுக்கச் சென்ற போது, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.
இதில் காயமடைந்த செல்வகுமாரை மீட்டு காயல்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல்நிலைய தலைமை காவலா் ரத்தினகுமாா் வழக்குப் பதிவு செய்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.