FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மொபெட் விபத்தில் பெண் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட் விபத்தில் பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

21 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே மொபெட் விபத்தில் பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த கருடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன்(56). இவா் தனது மனைவி வள்ளியுடன்(50) மொபெட்டில் கடந்த புதன்கிழமை வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

அந்தக் கிராம ஏரி அருகே செல்லும்போது வள்ளியின் சேலை மொபெட்டின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதனால் வள்ளி நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments