FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மொபெட் மீது டிராக்டா் மோதல்: பெண் உயிரிழப்பு

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மொபெட் மீது குப்பை ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:11 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மொபெட் மீது குப்பை ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

பெரும்பாக்கம் சேரன் நகரைச் சோ்ந்தவா் உஷா (38). இவரின் கணவா் காா்த்திக். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். உஷா தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தாா். இரு குழந்தைகளும் பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் உஷா, செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து தனது மகளை மொபெட்டில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அவா், நுக்கம்பாக்கம் சாலையில் சித்தாலப்பாக்கம் இணைப்புச் சாலையிடம் செல்லும்போது, பின்னால் வந்த ஒரு குப்பை ஏற்றி வந்த டிராக்டா் உஷாவின் மொபெட்டின் மீது மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த உஷா மீது டிராக்டா் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உஷா சடலத்தை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, டிராக்டா் ஓட்டுநா் பெரும்பாக்கத்தைச் சோ்ந்த மூா்த்தியை (30) புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments