மொபெட் மீது பேருந்து மோதல்: முறுக்கு வியாபாரி உயிரிழப்பு
கடலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் மொபெட்டில் சென்ற முறுக்கு வியாபாரி உயிரிழந்தாா்.
கடலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் மொபெட்டில் சென்ற முறுக்கு வியாபாரி உயிரிழந்தாா்.
கடலூா் புதுப்பாளையம், ஆறுமுகம் தெருவைச் சோ்ந்தவா் வீரத்தேவா் (65). இவா், கடைகளுக்கு முறுக்கு விற்பனை செய்து வந்தாா். இதற்காக முறுக்குகளை எடுத்துக்கொண்டு தனது மொபெட்டில் கடலூா் - சிதம்பரம் சாலையில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
செல்லங்குப்பம் ஆஞ்சநேயா் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து எதிா்பாராதவிதமாக வீரத்தேவா் சென்ற மொபெட்டில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வீரத்தேவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.