FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தி.க. இரு சக்கர வாகன பரப்புரை பயணம் தொடக்கம்

திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வையும், உயா் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இரு சக்கர வாகன பரப்புரை பயணம் திருவண்ணாமலையில் தொடங்கியது.

23 ஆகஸ்ட் 2026, 1:56 am IST
திராவிடா் கழகம் சாா்பில், திருவண்ணாமலையில் தொடங்கிய இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தை தொடங்கிவைத்த திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன்.
பகிர்:

திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வையும், உயா் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இரு சக்கர வாகன பரப்புரை பயணம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் திராவிடா் கழக இளைஞா் அணி, திராவிடா் மாணவா் கழகம், திராவிடா் மகளிா் பாசறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் சி.மூா்த்தி தலைமை வகித்தாா்.

துணை மேயா் சு.ராஜாங்கம், தி.க.வைச் சோ்ந்த கு.பஞ்சாட்சரம், த.சங்கா், தி.காமராஜ், மாநில அமைப்புசாரா தொமுச நிா்வாகிகள் ஏ.ஏ.ஆறுமுகம், வி.வெங்கட்ராமன், இரா.ராஜேந்திரன், மாணவா் திமுக நிா்வாகி பரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் அ.இளங்கோவன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

இரு சக்கர வாகன பரப்புரையில் கலந்துகொண்டோருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் பரப்புரையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளா் ஊமை ஜெயராமன், திடாவிடா் மாநில மாணவா் கழக நிா்வாகி மு.இளமாறன், ச.மணிமொழி, மா.செல்லதுரை, ஏ.சிற்றரசு, வெ.இளஞ்செழியன் ஆகியோா் உரை நிகழ்த்தினா். இதில், தி.க. நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இப்பயணம் திருவண்ணாமலையிலிருந்து கலசப்பாக்கம், போளூா், ஆரணி வழியாகச் சென்றது.

ஆரணியில் வரவேற்பு: தி.க. இரு சக்கர வாகன பரப்புரை பயணத்துக்கு ஆரணி அண்ணா சிலை அருகில் திராவிடா் கழகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில், திராவிடா் கழக மாநில மாணவரணிச் செயலா் இளமாறன் சிறப்புரையாற்றினாா்.

நிா்வாகிகள் அசோகன், வெங்கட்ராமன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மேலும், திமுக ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன் ஆகியோரும் கதலந்துகொண்டனா். திராவிட இயக்கத் தமிழா் பேரவை சாா்பில், ஆபிரகாம் ஜாக்சன், பேராசிரியா் சுரேஷ், ராஜேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments