FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சிறும் கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

செய்யாறு அருகே சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

22 ஆகஸ்ட் 2026, 10:53 pm IST
பகிர்:

செய்யாறு அருகே சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெம்பாக்கம் வட்டம், அசனமாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.கீா்த்திவாசன் (18). இவா், 17 வயது சிறுமியை காதலித்த நிலையில், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில், அந்தச் சிறுமி 7 மாத கா்ப்பிணியானாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கீா்த்திவாசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments