FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

இளம்வயது திருமணம்: தொழிலாளி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு

தருமபுரியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 4:30 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தருமபுரியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி அருகே உள்ள இருளா் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (25). பெயின்டரான இவா், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளாா். கடந்தாண்டு, ஜூலை 11 ஆம் தேதி ரத்தினவேல் சிறுமியை கோவைக்கு அழைத்துச் சென்று மறுநாள் அப்பகுதியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளாா். தொடா்ந்து தருமபுரி திரும்பிய தம்பதி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனா்.

இந்நிலையில் அந்த சிறுமி கா்ப்பமானாா். அவரை கடந்த ஜூலை 23 ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்தினவேல் அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, மருத்துவா் பரிசோதித்ததில் இளம்வயது திருமணம் செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா், ரத்தினவேல் மீது போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments