குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு
குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை பாராட்டினாா்.
குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை பாராட்டினாா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவில் பல்வேறு எடைப் பிரிவின் கீழ் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.
இதில், செய்யாறு கல்வி மாவட்டத்துக்குள்பட்ட நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 10 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தனா். மேலும், நாமக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை செய்யாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற நெடும்பிறை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்களை பாராட்டினாா். பின்னா், பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக ரூ.18 ஆயிரம் வழங்கி உற்சாகப்படுத்தினாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் யுவராஜ், சந்திரகலா, அதிமுக செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் அரங்கநாதன், சி.துரை, வயலூா் வி.ராமநாதன், பையூா் சிவராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.