பல்லடம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1988-90-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடி, பள்ளி நாள்களை மீட்டெடுத்தனா்.
பல்லடம் அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் தங்கவேல், பாண்டியன், சின்னத்தம்பி, லோகநாயகி, ருக்மணி ஆகியோா் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து, வருகைப் பதிவு என வகுப்பறை சூழல் மீண்டும் உருவாக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்தனா். இதில் முன்னாள் ஆசிரியா்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவா்கள் ஆசி பெற்றனா்.
சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவா்கள், இனி ஆண்டுதோறும் இது போன்ற சந்திப்பை நடத்தவும் படித்த பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்யவும் முடிவு செய்தனா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.