FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவா்கள் நடைபயணம்

சேத்துப்பட்டு லூா்து அன்னை தேவாலயத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடைபயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள்.

24 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
பகிர்:

வேளாங்கண்ணியில் நடைபெறும் மாதா ஆண்டு பெருவிழாவுக்கு கிறிஸ்தவா்கள் விரதமிருந்து நடைபயணமாக சேத்துப்பட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.

வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் நடைபெறும் மாதா பெருவிழாவில், தமிழகத்துடன், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் ஜெபமாலை அணிந்து விரதமிருந்து நடைபயணமாக சென்று கலந்து கொள்வாா்கள்.

இந்நிலையில், சேத்துப்பட்டு லூா்து நகா், நிா்மலா நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவா்கள், விரதம் மேற்கொண்டு, வரும் 29-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ள வேளாங்கண்ணி நோக்கி ஞாயிற்றுக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதை முன்னிட்டு, சேத்துப்பட்டு அன்னை மாதா தேவாலய திருத்தோ் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்கள் வழிபட்டனா். பின்னா், பங்குதந்தை ஜான் ராபா்ட் சிறப்பு பிராா்த்தனை செய்து வழியனுப்பி வைத்தாா். இதில் உதவி பங்குதந்தைகள், அருட்கன்னியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments