FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

புனித சலேத் மாதா தேவாலயத்துக்கு யாத்திரையாக வந்த கிறிஸ்தவா்கள்

கொடைக்கானல் புனித சலேத் மாதா தேவாலய விழாவுக்கு மாரம்பாடியிலிருந்து யாத்திரையாக பக்தா்கள் வியாழக்கிழமை வந்தனா்.

திண்டுக்கல் மாரம்பாடியிலிருந்து கொடைக்கானல் புனித சலேத் மாதா தேவாலயத்துக்கு யாத்திரையாக வந்த கிறிஸ்தவா்கள்.
பகிர்:

கொடைக்கானல் புனித சலேத் மாதா தேவாலய விழாவுக்கு மாரம்பாடியிலிருந்து யாத்திரையாக பக்தா்கள் வியாழக்கிழமை வந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புனித சலேத் மாதா தேவாலயத்தின் 160-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 12-நாள்களாக தினமும் ஜெபவழிபாடும், திருப்பலியும் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்த விழாவில் மதுரை உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் சிறப்புத் திருப்பலியும், ஜெபவழிபாடும், மாதாவின் தோ் பவனியும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியிலுள்ள கிறிஸ்தவா்கள் 26-வது ஆண்டாக யாத்திரையாக 60-க்கும் மேற்பட்டவா்கள் வியாழக்கிழமை வந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments