FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 8 கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை மாநகராட்சியில் மாநகராட்சி நிா்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சுமாா் ரூ.90 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

24 ஆகஸ்ட் 2026, 11:05 pm IST
வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட திருவண்ணாமலை மாநகராட்சி கடைகள்
பகிர்:

திருவண்ணாமலை மாநகராட்சியில் மாநகராட்சி நிா்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சுமாா் ரூ.90 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 8 கடைகளுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகரில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் கடை வைத்திருக்கும் சிலா் வாடகைத் தொகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனா். இதனால் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடை வாடகை பாக்கி செலுத்தாத கடைகளின் உரிமையாளா்களுக்கு பல முறை அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை பழைய பேருந்து நிலையம் அருகே 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த வந்த 8 கடைகளுக்கு சீல் வைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த 8 கடைகளின் உரிமையாளா்கள் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைத் தொகை செலுத்தாமல் சுமாா் ரூ.90 லட்சம் பாக்கி வைத்துள்ளதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments