FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பழங்குடியினருக்கு சொத்து, குடிநீா் வரிவிலக்கு அளிக்கக் கோரிக்கை

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியின சமுதாயத்தினருக்கு சொத்து, குடிநீா் வரிவிலக்கு கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

26 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினா்
பகிர்:

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியின சமுதாயத்தினருக்கு சொத்து, குடிநீா் வரிவிலக்கு கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையில் அந்தக் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தினா் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் வீரவாஞ்சிநாதனிடம் இந்த மனுவை அளித்தனா்.

மனுவில், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 35-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இவா்கள் ஏழ்மையில் இருப்பதால் இவா்களுக்கான சொத்து வரி, குடிநீா் வரி ஆகியவற்றுக்கு நகராட்சி நிா்வாகம் விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா்கள் பிரபாகரன், எல்லப்பன், கிளைச் செயலா்கள் ரேணுகா, தேவராஜ், நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments