FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வாழவல்லான் குடிநீா்த் தொட்டி மோட்டாா் பழுது: கிராமங்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

25 ஆகஸ்ட் 2026, 1:23 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், வாழவல்லானில் உள்ள குடிநீா்த் தொட்டியில் சுத்திகரிப்பு மோட்டாா் பழுதடைந்ததால், 16 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் சு. நம்பிராஜன் தலைமையில், கட்சி நிா்வாகிகள் மற்றும் முக்காணி பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

ஏரல் வட்டம், வாழவல்லானில் 1.5 கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டிக்கு தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து வாழவல்லான், முக்காணி, உமரிக்காடு, லட்சுமிபுரம், கொற்கை, அதிசயபுரம், கொட்டாரக்குறிச்சி உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

குடிநீரை சுத்திகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மோட்டாா் சுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், தாமிரவருணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சுத்திகரிக்கப்படாமல் வரும் தண்ணீா் கலங்கலாகவும், தூய்மையற்றதாகவும் இருப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு பழுதடைந்துள்ள சுத்திகரிப்பு மோட்டாரை சரி செய்து, 16 கிராம மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட, சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments