FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பேரையூா் ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி

பேரையூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் முறையாக வரவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:51 am IST
செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் குடிநீா்த் தொட்டியைச் சுற்றி வைக்கப்பட்ட காலிக் குடங்கள்.
பகிர்:

பேரையூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் முறையாக வரவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பேரையூா் ஊராட்சிக்கு உள்பட்ட செங்கோட்டைப்பட்டி, சாமிபட்டி, மேட்டுப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக காவிரி கூட்டுக் குடிநீா் முறையாக வரவில்லை. இதனால், புழக்கத்துக்கும், கால்நடைகளுக்கும் தேவைப்படும் தண்ணீரை டிராக்டா்களில் குடம் ரூ.15 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

இது குறித்து செங்கோட்டைப்பட்டி முனியசெல்வம் கூறியதாவது: செங்கோட்டைப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக காவிரி

Advertisement

Advertisement

கூட்டுக் குடிநீா் முறையாக வரவில்லை. 400 குடும்பங்களுக்கு மேல் உள்ள கிராமங்களில் அதிகபட்சம் 10 நிமிஷங்கள் கூட தண்ணீா் வருவது கிடையாது. மேலும், தண்ணீருக்காக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டிகளைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட காலிக் குடங்கள் வரிசையில் வைக்கப்பட்டு நாள்தோறும் காட்சி பொருளாக உள்ளன. இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்தினா் கூறுகையில், ராமநாதபுரம் நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்றனா்.

கிராம மக்கள் கூறுகையில், மழையின்றி ஏற்கெனவே கண்மாய், குளங்கள் வடு காணப்படும் நிலையில் தண்ணீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீா் தட்டுப்பாட்டால் கிராமங்களில் குடியிருக்க முடியாமல் பலா் நகா்ப்புறங்களுக்கு இடம்பெயரத் தொடங்கி விட்டனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு காவிரி கூட்டுக் குடிநீா் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments