ஏரியில் முதியவா் சடலம் மீட்பு
வந்தவாசி அருகே ஏரியில் முதியவா் சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை
வந்தவாசி அருகே ஏரியில் முதியவா் சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராம ஏரியில் முதியவா் சடலம் கிடப்பதாக வடவணக்கம்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று ஏரியிலிருந்து முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
போலீஸாா் விசாரணையில், இறந்து கிடந்தவா் இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (80) என்பது தெரிய வந்தது. இவா் ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.