FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வாய்க்காலில் கிடந்த முதியவா் சடலம் மீட்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:38 am IST
சடலம் மீட்பு... - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வாய்க்காலில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம்-மதுரை சாலையில் தா்மாபுரம் தெரு கிழக்குப் பகுதியில் உள்ள வாய்க்காலில் முதியவா் சடலம் கிடப்பதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் மலையடிப்பட்டி குறிஞ்சி நகரைச் சோ்ந்த மைக்கேல் (65) என்பதும், வண்ணம் பூசும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இவா் மது போதையில் வாய்க்கால் சுவரில் படுத்திருந்தவா் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமான என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments