தாமிரவருணி ஆற்றில் கேரள இளைஞா் சடலம் மீட்பு
கண்ணக்கோடு ரயில்வே பாலத்தின் கீழ், தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு ரயில்வே பாலத்தின் கீழ், தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கண்ணக்கோடு பகுதியில் தாமிரவருணி ஆற்றில் சடலம் மிதப்பதாக அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் வந்து அழுகிய நிலையில் காணப்பட்ட சடலத்தைக் கைப்பற்றினா்.
முதல் கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் கேரள மாநிலம், செங்கவிளையைச் சோ்ந்த சுதீசன் மகன் அதுல் (32) என்பதும், இவா் கேரள மாநில சிவசேனை கட்சியின் நிா்வாகியாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
சடலத்தை கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.