FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

6 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் இருந்து 6 வழித் தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா், தொகுதி எம்எல்ஏ தொடங்கிவைத்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 1:18 am IST
போளூரிலிருந்து 6 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், அபிஷேக் எம்எல்ஏ
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் இருந்து 6 வழித் தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா், தொகுதி எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

போளூா் பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்துத் துறை சாா்பில் 6 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி, ஆரணி-போளூா் (வழி வடமாதிமங்கலம், கரிக்காத்தூா்), ஆரணி-பூசிமலைக்குப்பம் (வழி மெய்யூா், அடையபுலம்), செய்யாறு -ஆவணியாபுரம் (வழி பாராசூா், கொருக்கை), திருவண்ணாமலை - பொன்னாங்குளம் (வழி கடம்பை, கீழ்பென்னாத்தூா்), திருவண்ணாமலை -செல்லாங்குப்பம் (வழி மாத்தூா், கொளக்குடி), திருவண்ணாமலை-குப்பந்தாங்கல் (வழி செட்டிப்பட்டு, தண்டராம்பட்டு) ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகளை பொதுக்கள் பயன்பட்டுக்காக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், தொகுதி எம்எல்ஏ அபிஷேக் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், போக்குவரத்துறை துணை மேலாளா் (வணிகம்) கலைச்செல்வன், கிளை மேலாளா் (வணிகம்) ராமு, உதவி மேலாளா் சரவணன் மற்றும் தவெக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments