FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு நுண்ணுயிரி தயாரிப்பு பயிற்சி

மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், கிராம அளவில் விவசாயிகளுக்கு வேம் நுண்ணுயிரி தயாரிப்பு என்ற தலைப்பில் பயிற்சி திருவண்ணாமலையை அடுத்த ஆடையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
ஆடையூா் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான வேம் நுண்ணுயிரி தயாரிப்பு பயிற்சி.
பகிர்:

மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், கிராம அளவில் விவசாயிகளுக்கு வேம் நுண்ணுயிரி தயாரிப்பு என்ற தலைப்பில் பயிற்சி திருவண்ணாமலையை அடுத்த ஆடையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு திருவண்ணாமலை வேளாண் உதவி இயக்குநா் த.குணசேகரன் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா்கள் தாமஸ், முனியப்பன் ஆகியோா் மேற்பாா்வையில், மண்ணில் பொதுவாக சாகுபடி செய்யும் விதைகளை வைத்து நுண்ணுயிரி தயாரிப்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

இயற்கை விவசாயி ராஜாமணி, வெள்ளை சோளம் மற்றும் மக்காச்சோளத்துடன் வேம் கல்சா் கலந்து நுண்ணுயிரி தயாரித்து சாகுபடி செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தாா்.

Advertisement

Advertisement

உயிரி உரங்களை பயன்படுத்தி விதை நோ்த்தி செய்தல், இயற்கை உரங்கள் தயாரிப்பு மற்றும் சாகுபடி உத்திகள் பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளா் பாலமுருகன் எடுத்துரைத்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் காவியா, அங்கக முறையில் பூச்சிகளை விரட்ட அக்னி அஸ்திரா தயாரிப்பு மற்றும் வழிமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் சத்திய நாராயணன், மண் மாதிரி சேகரிப்பது மற்றும் பதப்படுத்தி பரிசோதனை அலுவலகத்துக்கு அனுப்புவது, முடிவு வந்தவுடன் அதன்படி உரங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments