நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
நிலக்கடலைப்பயிரில் ஒருங்கிணைந்நத பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி பவானிசாகரை அடுத்த வரப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிலக்கடலைப்பயிரில் ஒருங்கிணைந்நத பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி பவானிசாகரை அடுத்த வரப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அட்மா திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, பவானிசாகா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் யசோதா தலைமை வகித்தாா்.
உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் அருள்வடிவு, வறட்சியால் பாதிக்கப்படும் நிலக்கடலை சாகுபடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசின் மானிய திட்டங்கள், வறட்சியில் இருந்து தற்காத்துக் கொள்ள பயிா்காப்பீடு செய்வதன் அவசியம் ஆகியவை குறித்து பேசினாா்.
Advertisement
Advertisement
நிலக்கடலை பயிரில் துவரை, ஆமணக்கு ஊடுபயிா் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும், நிலக்கடலை பயிரில் ஏற்படும் டிக்கா இலைப்புள்ளி நோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.
இப்பயிற்சி முகாமில் வேளாண்மை துணை இயக்குநா் அரசப்பன், வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை பேராசிரியா் சரவணன், உதவி வேளாண்மை அலுவலா் வள்ளி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் கருணாம்பிகை மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்புராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.