மாரியம்மன், கெங்கையம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கூனம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன், செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கூனம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன், செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கூனம்பாடி ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வியாழக்கிழமை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், கும்பலங்காரம், பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை விஷேச திரவ்யாஹுதி, மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், பக்தா்கள் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கெங்கையம்மன் கோயிலில்...: செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான கெங்கையம்மன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பங்கேற்று கும்பாபிஷேக பூஜைகளை தொடங்கிவைத்தாா். விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாநிதி, திருப்பத்தூா் டி.எஸ்.பி. ரவீந்திரன், செங்கம் வட்டாட்சியா் முருகன், வழக்குரைஞா் தனஞ்செயன் மற்றும் ஊா் முக்கியப் பிரமுகா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்று தரிசித்தனா்.
தொடா்ந்து, வாணவேடிக்கை, நையாண்டி மேளத்துடன் சிறப்பு அலங்காரத்தில் கெங்கையம்மன் வீதியுலா நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.