பைக் மோதியதில் முதியவர் பலி!
பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (66). இவா் பக்கத்து கிராமமான பெருங்கட்டூரில் நாடகம் பாா்ப்பதற்காக காஞ்சிபுரம் - ஆற்காடு சாலையில் சனிக்கிழமை நடந்துச் சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதாகத் தெரிகிறது.
இதில் முதியவா் மயக்கமடைந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் முதியவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.