FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்து: இளைஞா் பலி

தூத்துக்குடியில் சனிக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:55 am IST
சடலம் மீட்பு
பகிர்:

தூத்துக்குடியில் சனிக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யாதவா் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்தமிழரசன் (18), பூவலிங்கம் மகன் மாரிக்கண்ணன் (18) ஆகிய இருவரும் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள தனியாா் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.

சனிக்கிழமை காலையில் பணிக்குச் செல்வதற்காக, இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனராம். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் உள்ள திருச்செந்தூா் சாலை ரவுண்டானா அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாம்.

Advertisement

Advertisement

இதில் முத்தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த காயமடைந்த மாரிக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments